பெரம்பலூர் மாவட்டத்தில் முதுகலை ஆசிரியர் போட்டி எழுத்துத்தேர்வு : மாவட்ட வருவாய் அலுவலர் பா.பாஸ்கரன் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      பெரம்பலூர்
perambalu 2017 06 02

 

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று(2.7.2016) நடைபெற்ற முதுகலை ஆசிரியர் போட்டி எழுத்துத் தேர்வினை மாவட்ட வருவாய் அலுவலர் பா.பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு, தேர்வு மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்றும், முறையாக தேர்வு நடைபெறுகின்றதா என்றும் ஆய்வு செய்தார்கள்.

வருவாய் அலுவலர் ஆய்வு


பின்னர் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்துள்ளதாவது:பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப்பள்ளி, தனலட்சுமி சீனிவாசன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மேல்நிலைப்பள்ளி, தந்தை ஹேன்ஸ் ரோவர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, பனிமலர் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிறுவாச்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சாரதாதேவி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 13 மையங்களில் முதுகலை ஆசிரியர் போட்டி எழுத்துத் தேர்வு நடைபெற்றது.மொத்தம் 4,718 நபர்கள் இத்தேர்வினை எழுத விண்ணப்பித்திருந்தனர்.

இதில் 4477 நபர்கள் இன்று தேர்வெழுதினர்.241 நபர்கள் தேர்வு எழுதவருகைபுரியவில்லை, அனைத்துத்தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதுபவர்களுக்குத்தேவையான அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினர் அனைத்து மையங்களுக்கும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை தகுந்த பாதுகாப்புடன் கொண்டுசெல்ல வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டு முறையாக வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்குச் சேர்க்கப்பட்டது. இத்தேர்விற்கான பணிகளில் முதன்மைக் கண்காணிப்பாளர்கள், கூடுதல் முதன்மைக்கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள் தேர்வு மையங்களுக்கு ஒருவர் வீதம் தலா ஒவ்வொரு பிரிவிலும் 13 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 9 நபர்கள் பார்வைத்திறன் குறைபாடுடையவர்கள் ஆவர். இவர்கள் தேர்வெழுதுவதற்கு உதவியாக 10 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் இரண்டு அலுவலர்கள் வீதம் 26 நபர்கள் அடங்கிய 13 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், காவல்துறையினர், அலுவலக உதவியாளர்கள், நீரளிப்பவர், துப்புறவு பணியாளர்கள் என மொத்தம் 496 நபர்கள் தேர்வுப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்மொழிதேவி,பெரம்பலூர் வட்டாச்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அலவலர்கள் உடனிருந்தனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து