கரூர் மாவட்டத்தில் ஆசிரியர் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு கலெக்டர் கு.கோவிந்தராஜ் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      கரூர்
karur 2017 06 02

 

கரூர் காந்திகிராமம் புனிததெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வெண்ணெய்மலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று (02.07.2017) பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவித்ததாவது.

 ஆசிரியர் தேர்வு


 கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக இன்று (02.07.2017) தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுக்காக 12 பாடங்களில் மாற்றுத்திறனாளிகள் 57 உட்பட 3774 பேர் விண்ணப்பித்திருந்தனர். இத்தேர்வர்களுக்காக 10 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வுப் பணிகளுக்காக வினாத்தால் கட்டுக் காப்பாளர்கள், முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள்,வழித்தட அலுவலர்கள்,அறைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்; என 353 தேர்வு பணியாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.

 மேலும் இத்தேர்வினை செம்மையாக நடத்திடவும்,தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கவும்,தேர்வு மையங்களை திடீர் பார்வையிடவும்,மாவட்ட கலெக்டர் தலைமையில் 12 பேர் கொண்ட மாவட்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. என மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தெரிவித்தார். இத்தேர்வுக்காக விண்ணபித்தவர்களில் 253 பேர் தேர்வு எழுதவரவில்லை இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யணன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில்.வட்டாச்சியர் சக்திவேல் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து