முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வை 5552 பேர் எழுதினர் : கலெக்டர் சு.கணேஷ் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      புதுக்கோட்டை
Image Unavailable

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்பட்ட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், நேற்று 02.07.2017 நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:

5552 பேர் எழுதினர்

 தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடைபெற்றது. அதனடிப்படையில் புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 14 தேர்வு மையங்களும், அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களும் என மொத்தம் 17 தேர்வு மையங்;களில் தேர்வு நடைபெற்றது. இதில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெறும் தேர்வு மையங்களான சிவபுரம் மாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை மவுண்ட்சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கைக்குறிச்சி ஏடிஆர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

 மேலும் நமது மாவட்டத்தில் போட்டித் தேர்வு எழுத 1953 ஆண்களும், 3975 பெண்களும் என மொத்தம் 5928 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் இன்று நடைபெற்ற தேர்வினை 1863 ஆண்களும், 3689 பெண்களும் என மொத்தம் 5552 தேர்வர்கள் தேர்வு எழுதினர். இதில் 90 ஆண்களும், 286 பெண்களும் என மொத்தம் 376 தேர்வர்கள் தேர்வுக்கு வரவில்லை. தேர்வு கூடத்தில் கைப்பேசி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் தடை செய்யப்பட்டிருந்தது.

 மேலும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையில் தலா 17 தலைமை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் தலைமை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டும், ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் 2 ஆசிரியர்கள் மற்றும் 2 காவலர்கள் என மொத்தம் 17 தேர்வு மையங்களுக்கும் 68 நபர்கள் அடங்கிய சோதனைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. எனவே தேர்வர்கள் எவ்வித முறைகேடுகளும் இன்றி தேர்வினை எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் விடைத்தாள்களை உரிய காவல் பாதுகாப்புடன் தேர்வு மையத்திலிருந்து எடுத்து செல்ல சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், கூறினார்.

இந்த ஆய்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து