ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு: கலெக்டர் வா.சம்பத் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      சேலம்
slm collector 2017 07 02

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்  தேர்வானையத்தால் நடத்தப்படும் உதவி வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு மையங்களை  கலெக்டர் வா.சம்பத்   நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு பின் கலெக்டர்  தெரிவித்ததாவது

 கலெக்டர் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி எழுத்துத் தேர்வு  சேலம் மாவட்டத்தில் 31  தேர்வு மையங்களில் நடைபெற்றுவருகிறது. மொத்தம் இத்தேர்விற்கு 11,592 தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 10,760 தேர்வாளர்கள் தேர்வுஎழுதினர். இது 93 சதவீத வருகைப்பதிவாகும். இத்தேர்வில் 146 மாற்றுத்திறனாளி தேர்வாளர்களும் அடக்கமாகும். மேலும், 47 கண்பார்வையற்ற தேர்வாளர்களுக்கு பயிற்சி பெற்ற சொல்வதை எழுதும் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு நடைபெறும் இடங்களில் ஒன்றான மரவனேரி புனித பால்ஸ் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், இன்றைய தினம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வானையத்தால் நடத்தப்படும் உதவி வேளாண் அலுவலர் பணிக்கான எழுத்து தேர்வு சேலம் மாவட்டத்தில் 3 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. மொத்தம் தேர்வினை எழுத 811 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 733 தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். இது 90 சதவீத வருகை பதிவாகும். இத்தேர்வு நடைபெறும் இடங்களில் ஒன்றான மரவனேரி பாரதி வித்யாளையா மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேற்கண்ட தேர்வுகளை கோட்டாட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்களும், வட்டாட்சியர் நிலையிலான பரக்கும் படை அலுவலர்கள் மற்றும் தேர்வரை மேற்பார்வையாளர்கள் என 750 அலுவலகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வினை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்யும் வகையில் வீடியோ ஒளிப்பதிவு செய்யப்படுகிறது. மேலும் விடைத்தாள்களை உரிய பாதுகாப்புடன் வைத்திட அலுவலகளுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் வா.சம்பத்,   தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகொளரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சி.விஜய்பாபு, சேலம் வட்டாட்சியர் லெனின், வருவாய்த்துறை தலைமை உதவியாளர்கள் பத்மா, கலைசெல்வி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து