முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாமக்கல் மாவட்டத்தில் 7511 பேர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதினர் கலெக்டர் மு.ஆசியா மரியம் தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      நாமக்கல்
Image Unavailable

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஃ உடற்கல்வி இயக்குநர் நிலை போட்டி எழுத்துத்தேர்வு  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்வு மையங்களை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நல்லிபாளையம், நாமக்கல் (வடக்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் (தெற்கு) அரசு மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு  தேர்வு மையங்களை கலெக்டர் மு.ஆசியா மரியம்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து கலெக்டர் மு.ஆசியா மரியம்  தெரிவித்ததாவது,

 தேர்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஃ உடற்கல்வி இயக்குநர் நிலை போட்டி எழுத்துத்தேர்வு நாமக்கல் மாவட்டத்தில்  நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 21 மையங்களில் இத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்திருந்த 7944 தேர்வர்களில் 7511 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 433 தேர்வர்கள் தேர்வு எழுத வருகை தர வில்லை.   இத்தேர்வினை நாமக்கல் மாவட்டத்தில் சிறப்பாக நடத்திட 4 வழித்தட அலுவலர்களும், 21 முதன்மை கண்காணிப்பாளரும், 21 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளரும், 21 துறை அலுவலர்களும், 21 கூடுதல் துறை அலுவலர்களும், உடல் பரிசோதகராக 84 ஆசிரியர்களும், 448 அறை கண்காணிப்பாளரும் என 620க்கும் மேற்பட்ட அலுவலர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்வாறு கலெக்டர் மு.ஆசியா மரியம்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ப.உஷா, நாமக்கல் வருவாய்க் கோட்டாட்சியர் மா.இராஜசேகரன், நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் இராஜகோபால், மாவட்ட கல்வி அலுவலர் அருளரங்கன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து