முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு

ஞாயிற்றுக்கிழமை, 2 ஜூலை 2017      வர்த்தகம்
Image Unavailable

ஜி.எஸ்.டி என்று அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

ஜி.எஸ்.டி.யால் வீட்டு உபயோகத்துக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் விலை இந்த மாதத்தில் இருந்து உயருகிறது. 5 சதவீதம் வரி விதிக்கப்படுவதால் கியாஸ் சிலிண்டர் வாங்க ரூ.574.50 செலுத்த வேண்டும்.

கடந்த மாதம் சென்னையில் சமையல் கியாஸ் விலை ரூ. 560 ஆக இருந்தது. இப்போது ரூ.14.50 உயர்த்தப்பட்டுள்ளது.  கியாசுக்கு செலுத்தப்படும் ரூ.574.50-ல் வாடிக்கையாளர்களுக்கு மானியமாக ரூ.108.42 கிடைக்கும். இது வழக்கம்போல் வங்கியில் செலுத்தப்படும். இதில் வினியோகஸ்தருக்கான கமிஷன் ரூ.47.63 ஆகவும், ஜி.எஸ்.டி.க்கு ரூ.24.96வும், மத்திய, மாநில அரசுகளுக்கு தலா ரூ.12.48 ஆகவும், போக்குவரத்து கட்டணமாக ரூ.19.96 ஆகவும் சென்னையி்ல் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 சதவீத ஜி.எஸ்.டி. வினியோக கமிஷன் தான் வாடிக்கையாளர்களை பாதிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து