முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மட்கும் மற்றும் மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்க குடியிருப்போர் சங்கத்தினர் முன்வர வேண்டும் ஆணையாளர் அனீஷ் சேகர் வேண்டுகோள்.

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 அக்ரினி குடியிருப்பில் உள்ள வசுதாரா குடியிருப்பு வளாகத்தில் அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலசங்கத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  முன்னிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்  கொ.வீரராகவராவ் வழங்கி பேசும்போது தெரிவித்ததாவது.

மதுரை மாநகரை தூய்மையான மாசில்லாத மதுரையாக மாற்றுவதற்காக மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். மாநகரில் உள்ள கால்வாய்கள், நீர்நிலைகள் என எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்லமுடியாமல் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நாள் ஒன்றுக்கு சுமார் 600 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதனை தரம் பிரிப்பதற்கு நிறைய பொருட்செலவு ஏற்படும். எனவே ஒவ்வொரு வீட்டிலும் சேரும் குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவதால் குப்பையிலிருந்து உரம், இயற்கை எரி வாயு உள்ளிட்ட பயனுள்ள பொருட்கள் தயாரிக்க எளிதாக இருக்கும். குப்பைகளையும் பயனுள்ள வகையில பயன்படுத்த முடியும். மேலும் பருவமழை பொய்த்த காரணத்தினால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மாநகராட்சியின் சார்பில் சுமார் ரூ.10 கோடி செலவு செய்யப் பட்டுள்ளது. எனவே நாம் சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமையான மரங்களை வளர்க்க முன்வர வேண்டும். மேலும் தமிழக அரசின் ஆணைக்கிணங்க மாடித் தோட்டத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிறிய இடம் இருந்தாலே இதற்கு போதுமானது. மாவட்ட தோட்டக்கலை துறையின் மூலம் மாடித் தோட்டத்திற்கு தேவையான இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்கி தங்களுக்கு தேவையான காய்கறிகளை நீங்களே உற்பத்தி செய்து சுத்தமான காய்கறிகளை பெறலாம். மாநகராட்சி என்பது பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்ததுதான். எனவே சுத்தமான மாநகராக மாற்றுவதற்கு அனைவரும் முன் உதாரணமாக குப்பைகளை மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பைகள் என பிரித்து வழங்க வேண்டும் என்றார்.

ஆணையாளர் அவர்கள் பேசும்போது தெரிவித்ததாவது :

நம் வீடுகளில் சேரும் குப்பைகளை இதுநாள்வரை ஒரே குப்பைத் தொட்டியில் போட்டு வந்துள்ளோம்;. இந்த நிலைமையை மாற்றி மட்கும் குப்பைகளை பச்சை நிறத் குப்பைத் தொட்டிகளிலும், மட்காத குப்பைகளை நீல நிற குப்பைத் தொட்டிகளிலும் போட வேண்டும். மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை எவைஎவை என அறிந்து கொள்வதற்காக மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அதனை புரிந்து குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும். குப்பைகளை பிரித்து வழங்குவதால் கழிவுகள் கழிவுப் பொருட்களாக இல்லாமல் பயனுள்ள பொருட்களாக பயன்படுத்த முடியும். குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதால் மறு சுழற்சி செய்ய எளிதாக இருக்கும். மேலும் மட்கும் குப்பையிலிருந்து உரமும் மட்காத குப்பையிலிருந்து பயோ ஆயில் தயாரிக்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் குப்பைகளை தரம் பிரித்து வழங்கி  இத்திட்டம் 100 சதவீதம் வெற்றி பெற உதவ வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் திரு.சதிஷ் ராகவன், உதவி ஆணையாளர் திரு.செல்லப்பா, உதவி நகர்நல அலுவலர் திரு.பார்த்திப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், சுகாதார அலுவலர் திரு.ராஜ்கண்ணன், செயற்பொறியாளர் திரு.சேகர், வசுதாரா அடுக்குமாடி வீடு உரிமையாளர்கள் நலச்சங்க செயலாளர் திரு.எல்.சுரேஷ், இணை செயலாளர் திரு.மோகன், பொருளாளர் திரு.நாகராஜன், என்லைட் டிரஸ்ட் நிறுவனர் செல்வி.ப்ரியதர்சினி உட்பட மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

இறுதியில் குடியிருப்;போர் சங்கத்தின் சார்பில் அனைத்து வீடுகளுக்கும் பச்சை மற்றும் நீல நிற குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டது. முன்னதாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
 
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து