முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில்! மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் ஆர்த்அலைன் அதிநவீன தொழில்நுட்பம்

திங்கட்கிழமை, 3 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

 மதுரை, ஜூலை - மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில், எலும்பு மூட்டு, முதுகெலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவில் முதன்முறையாக ஆர்த்அலைன் என்னும் அதிநவீன தொழில்நுட்பம் துணைகொண்டு மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.

மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் முதுநிலை எலும்பு மூட்டு, முதுகெலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிறப்பு நிபுணர் டாக்டர். மு. ராஜபாண்டியன் கூறும்போது, "உலகளவில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சையில், மூட்டு சீரமைப்பை துல்லியமாக செய்து முடிப்பதில் பல்வேறு பரிமாணங்களை கண்டுவிட்டது இந்த மருத்துவ உலகம். மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மிகவும் துல்லியமாகவும் மற்றும் கைதேர்ந்தவர்கள் மட்டுமே செய்யக் கூடியதாகும் ஏனெனில் மூட்டு எந்தளவுக்கு கச்சிதமாக பொருந்துகிறதோ, அதன் செயல்பாடு அதைச் சார்ந்தது ஆகும். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இதற்கு பெரிதும் துணைபுரிந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, பாரம்பரிய அறுவை சிகிச்சை முறையை விட கணிணி துணை கொண்டு செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள் மூலம் ஓரளவிற்கு துல்லியமான சீரமைப்பை எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த கணிணி துணை கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளால் பாரம்பரிய முறையை விட குறைந்த வலி, குறைந்த நாட்களில் குணமடைதல் போன்றவற்றை அடைந்தாலும், சீரமைப்பின் துல்லியத்தில் மனநிறைவு ஏற்படுவது எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு சவாலாகவே இருந்தது. துல்லியம் என்பது செயற்கை மூட்டை (வுமுசு) சரிவர நேர்பட பொருத்துதல் ஆகும். இந்த கணிணி துணை அதிநவீன ஆர்த்அலைன் என்னும் கருவியானது மிகவும் எளிமையானதாகவும், துல்லியமான சீரமைப்பையும் கொண்டுள்ளது. இந்நக் கருவி கையடக்கமான, ஒவ்வொரு நோயாளிக்கென்றும் பிரத்யேகமாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் அதினநவீன தொழில்நுட்ப கருவியாகும்.

எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு உண்டாயிருந்த கவலைகளை நிவர்த்தி செய்ய ஒரு விடிவெள்ளி போல தோன்றியுள்ள இந்த அதிநவீன தொழில்நுட்ப கருவியால் எலும்பு மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் மூட்டுகளை ஊடுருவிச் சென்று, மூட்டுகளை துல்லியமாக அளவெடுத்து, சீரமைத்து துல்லியமாக மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்படுகிறது. மேலும்;, மூட்டு செயற்கை உள்வைப்புகளை (iஅpடயவெள) சரியாக பொருத்தவும் முடியும்.

அது மட்டுமல்லாமல், இந்த தொழில்நுட்பத்தின் மூலம், மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட கால் முன்னெலும்பு, இடுப்பு எலும்புகளை கச்சிதமாக வெட்டுதல் மற்றும் முழங்கால் பகுதியை சுற்றியுள்ள மென்சதைகளின் திசுக்களை சமச்சீராக ஒழுங்குப்படுத்துதலும் செய்ய மிகவும் துணை புரிகிறது. இந்த அதிநவீன ஆர்த்அலைன் தொழில்நுட்பம் மூலம் செய்யப்படும் மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சைகள் வழக்கமான முறையில் இயந்திரங்கள் மற்றும் கணிணி துணை கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளை காட்டிலும் மிகவும் துல்லியமாக மூட்டுகளை சீரமைப்பதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் அவர் கூறுகையில், எலும்பு மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சையில் உபயோகப்படுத்தப்படும் மூட்டு செயற்கை உள்வைப்பின் (iஅpடயவெள) காலநீட்டிப்பும், சிறந்த செயல்பாடும் அது எவ்வாறு கச்சிதமாக நமது உடலிலுள்ள எலும்புகளுடன் ஒட்டி சீரமைந்துள்ளது என்பதை பொருத்துதான் அமையும். இந்த வகையில் ஆர்த்அலைன் பெரிதும் உறுதுணையாக உள்ளது. இந்த ஆர்த்அலைன் உதவி கொண்டு செய்யப்படும் அறுவை சிகிச்சை முறைகள் மிகவும் கச்சிதமாக, துல்லியமான முறை மட்டுமல்ல, மிகவும் பாதுகாப்பான முறையும் கூட. இந்த முறையில் அறுவை சிகிச்சை செய்யும்பொழுது, மூட்டு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மற்ற முறைகளால் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களை விட குறைவான மருத்துவமனை உள்ளிருப்பு நாட்கள், குறைவான இரத்த இழப்பு போன்ற பயன்களை அடைவர். மேலும் சில நாட்கள் கழித்து மூட்டு பிரச்சனை ஏற்படுதல், அதன் காரணமாக மறு அறுவை சிகிச்சை பெறும் சாத்தியங்கள் போன்றவை, இந்த அறுவை சிகிச்சையில் மிகவும் குறைவு என்று இதன் பயன்களை விவரித்துக் கூறினார்.

மேலும், சர்வதேச மூட்டு சீரமைப்பு அறுவை சிகிச்சை (ஆர்த்தோபிளாஸ்டி) பத்திரிகையில் வெளியான பதிப்பு ஒன்றில், "இந்த ஆர்த்அலைன் முறையில் சிகிச்சை பெற்றவர்கள் 94.9 சதவீதம் துல்லியமான மூட்டு சீரமைப்பு அடைந்ததாகவும், இது மற்ற சிகிச்சை முறைகளை விட 2 சதவீதம் அதிக பயனளிக்க கூடியதாக அமைந்துள்ளதாகவும் வெளியிட்டுள்ளது என்று சான்றாக குறிப்பிட்டார்.

அப்போலோ மருத்துவமனை குழுமத்தின் மதுரை மண்டலம் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ரோகிணி ஸ்ரீதர் அவர்கள் பேசும்போது, மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனை நவீன மருத்துவக் கருவிகளின் துணை கொண்டு பலருக்கு நலமான வாழ்வை வழங்கி வருகிறது. மதுரையில் இதுவரை அறிமுகப்படுத்தபடாததுமான ஒரு புதிய, எளிய சிகிச்சை முறையான ஆர்த்அலைன் சிகிச்சை முறையில் கற்றுத் தேர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமது, நோயாளிகளுக்கு பயன்பெறும் வகையில் இந்த அறுவை சிகிச்சைகளை முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் செய்து அனைவருக்கும் பயன் அளித்துள்ளார் என்று குறிப்பிட்டார். தென்தமிழகத்திலேயே இந்த அறுவை சிகிச்சை முதன்முறையாக மதுரை அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளதாக பெருமிதமாக குறிப்பிட்டார்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து