முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் -கோரிக்கை மனுக்களைப்பெற்று நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சிவஞானம் வழங்கினார்.

செவ்வாய்க்கிழமை, 4 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

 விருநுநகர். -விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது.
 இக்கூட்டத்தில், தமிழக அரசின் நலத் திட்டங்கள் பெறுவது தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களையும்  பொதுமக்களிடமிருந்து  நேரடியாக பெற்று, மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்கள், தனிநபர் வழங்கிய மனுக்கள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து துறைவாரியாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
 நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது,
 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகளும் தங்களுக்குரிய அனைத்து கோப்புக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது துறை அலுவலர்கள் உடனுக்குடன் துரித நடவடிக்கை எடுத்து மனுக்கள் நிலுவை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும், 15 நாட்களுக்குள் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். எனவே, தனிக்கவனம் செலுத்தி இம்மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு சரியான தகவல்களை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு தெரிவித்து அதன் தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலும் தெரிவித்திட வேண்டும். அதே போன்று தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக உரிய நபர்களுக்கு பதில் தெரிவித்து அதற்கான தகவலை உரிய பதிவேட்டில் பதிவு செய்து பதிவு செய்யப்பட்ட பதில் சரியான முறையில் பதிவாகி உள்ளதா என்பதனை அனைத்துதுறை அலுவலர்களும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அரசு ஏடான தமிழரசு இதழுக்கு அனைத்து துறை அலுவலர்களும் விருதுநகர் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட சந்தாரர்களின் குறியீட்டினை ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
 முன்னதாக, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 121 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான இலவச வீட்டுமனைப்பட்டாக்களையும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் 15 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8 லட்சத்து 80 ஆயிரத்து 350 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
 இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம்  முருகேசன் உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து