முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் கௌமாரியம்மன் ஆனிப்பெருந்திருவிழா

புதன்கிழமை, 5 ஜூலை 2017      தேனி
Image Unavailable

தேனி ஜுலை 06 பெரியகுளம் பகுதியில் பிரசித்தி பெற்ற கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப்பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டும் இத்திருவிழாவை முன்னிட்ட கடந்த 18ம் தேதி முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது. அதனை தொடாந்து நேற்று முன்தினம் மாலையில் கம்பம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மாலையில் கௌமாரியம்மன் கோவிலிலிருந்து பூசாரி  அழைப்புக்கு சென்று கரகம் எடுத்து முளைப்பாரியுடன் வீதிவுலா வந்து கோவிலை வந்தடைந்தது. பின்னர் கம்பத்திற்கு பூஜைகள் நடைபெற்று கம்பம் நடும் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இவ்விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.  வரும் 10ம் தேதி கொடியேற்றமும், 18ம் தேதி மாவிளக்கு எடுத்தல் மற்றும் ரத உற்சவமும், 19ம் தேதி அக்னிசட்டி எடுத்தலும், 25ம் தேதி மறுபூஜையும் பாலாபிஷேகமும் நடைபெற உள்ளது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து