புனேயில் நடைபெற்ற பன்மொழி நாடகம், நடன இசை போட்டியில் அழகப்பாபல்கலைக்கழக மாணவி முதல் பரிசு:

புதன்கிழமை, 5 ஜூலை 2017      சிவகங்கை
karaikudi

 காரைக்குடி:-அகில இந்திய அளவிலான பன்மொழி நாடகம், நடனம் மற்றும் இசைப் போட்டிகள் புனேயிலுள்ள அகில பாரதிய சமஸ்கிருத சங்கத்தின் சார்பில் அண்மையில் புனேயில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 காரைக்குடி அழகப்பாபல்கலைக் கழகத்தின் சார்பில் அழகப்பாதிறன் மேம்பாட்டு நிறுவனத்தில் டீ.ஏழஉ. பே~ன் டெக்னாலஜி மூன்றாமாண்டு பயிலும் மாணவி வ. பாலாம்பிகா, பரதநாட்டியம் சீனயர் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றுள்ளார்.
மேலும், வருகிறநவம்பர் 21-26 வரை ஸ்பெயின் நாட்டில் நடைபெற உள்ள 7-வது கலாச்சார ஒலிம்பியாட் கலைநிகழ்ச்சிப் போட்டியில் கலந்து கொள்;வதற்கும் தகுதி பெற்றுள்ளார்.
முதல் பரிசு பெற்ற மாணவி செல்வி வ. பாலாம்பிகா, தனது பெற்றோருடன் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை துணைவேந்தர் அவர்கள் பாராட்டி கௌரவித்தார். அழகப்பாதிறன் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் பேரா. தர்மலிங்கம் உடன் இருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து