முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் புதிய கட்டண விவரம்

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

சென்னை, ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. புதிய கட்டண விவரத்தை கீழே பார்க்கலாம்.

சினிமா டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி வரி விதித்து உள்ளது. 100 ரூபாய்க்கு குறைவான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 18 சதவீதமும் 100 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் உள்ள டிக்கெட்டுகளுக்கு 28 சதவீதமும் வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த 1-ந்தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமுலுக்கு வந்துவிட்டது.

ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும் 3-ந்தேதியில் இருந்து தியேட்டர்களை மூடி போராட்டத்தில் குதித்ததாலும் புதிய சினிமா டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிப்பதில் குழப்பம் ஏற்பட்டது.தற்போது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வசூலிக்கப்பட இருந்த கேளிக்கை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால், நேற்று முதல் பழைய டிக்கெட் கட்டணத்துடன் ஜி.எஸ்.டி வரியை மட்டும் சேர்த்து புதிய டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் ஏற்கனவே ரூ.120, ரூ.100, ரூ.10 கட்டணத்தில் டிக்கெட் விலைகள் இருந்தன. இன்று முதல் ரூ.120 டிக்கெட் கட்டணம் 153 ரூபாய் 60 காசு என்றும் ரூ.100 டிக்கெட் கட்டணம் ரூ.128 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் 11 ரூபாய் 80 காசு என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.

சாதாரண குளிர்சாதன வசதி கொண்ட தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.50 டிக்கெட் கட்டணம் ரூ.59 என்றும் ரூ.10 டிக்கெட் கட்டணம் ரூ.11.80 என்றும் உயர்த்தப்பட்டு உள்ளது.குளிர்சாதன வசதி இல்லாத தியேட்டர்களில் ஏற்கனவே வசூலிக்கப்பட்ட ரூ.30 டிக்கெட் கட்டணம் 35 ரூபாய் 40 காசு என்றும் ரூ.5 டிக்கெட் கட்டணம் 5 ரூபாய் 90 காசு என்றும் மாற்றி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து