முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வலியுறுத்தி நெசவாளர்கள் வேலை நிறுத்தம்

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2017      தேனி
Image Unavailable

 ஆண்டிபட்டி - தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாக்கு உட்பட்ட டி.சுப்பிலாபுரம்,ஜக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்ப்பட்ட விசைத்தறி,கைத்தறி கூடங்கள் உள்ளன இதில் மறைமுகமாகவும்,நேரடியாகவும் 40ஆயிரத்துக்கும் மேல் நெசவாளர்கள் பனி புரிந்து வருகின்றனர்.காட்டன் ரக சேலைகள் உற்பத்தி செய்கின்றனர்.இங்கு நெய்யப்படும் சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும்,பிற மாநிலங்களுக்கும், விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழக அரசின் இலவச வேஷ்டி,சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் மூலம் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.விசைத்தறி,கைத்தறி நெசவாளர்களின் வாழ்வதரத்தை காக்க மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை அளித்துள்ளார்.இந்நிலையில் நெசவுத்தெழிலுக்கு தற்போது மத்தியஅரசு 40 சதவிதம் வரை ஜி.எஸ்.டி.வரி  விதித்துள்ளது.இதானல் நெசவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதன் காரணமாக நெசவாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.நெசவாளர்கள் கூறும்போது கடந்த காலங்களில் நூல்,பாவு,சாயம் என மூலப்பொருட்களின் விலை ஏற்றம்,இறக்கமாக இருந்தது.ஆ£னல் மத்திய,மாநில,அரசு வரி இல்லை.தற்போது நூலுக்கு 5,சாயம்12,பசை18,உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் விற்பனைக்கு 5 என மொத்தம் 40 சதவிதம் ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்பட்டுள்ளது.எனவே சேலை,வேஷ்டிகளை கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.விலை உயர்வு என்றால் பொருள்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காண்பிக்கமாட்டர்கள் மில் ரக சேலைகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் பெண்கள் அதை வாங்க ஆர்வம் காட்டுவர்கள் பருத்தி சேலைகளை வாங்க மாட்டர்கள்.இதனால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேக்கம் அடைந்து பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.அதனால் ஜி.எஸ்.டி.வரியை ரத்து செய்ய வலியுறுத்தி விசைத்தறி,கைத்தறி கூடங்களை மூடி காலவரையற்ற வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதே ஜி.எஸ்.டி வரி விதிப்பு தமிழக அரசின் இலவச சேலை உற்பத்திக்கும் பொருந்தும் இதனால் ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்குவதாக கூறப்படும் கூட்டுறவு சங்கங்கள் மேலும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.மானம் காக்கும் நெசவாளர்களின் வாழ்வை காக்குமா மத்திய மாநில அரசுகள் நெசவாளர்களின் ஏதிர்பார்ப்பாக உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து