முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் மணிமண்டப கட்டும் பணிகள் தீவிரம்: இம்மாதம் 27-ஆம் தேதி திறக்க மத்திய அரசு நடவடிக்கை.

வெள்ளிக்கிழமை, 7 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,ஜூலை,8:  இராமேசுவரம் அருகே கட்டப்பட்டு வரும் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மணிமண்டபம் அவரது இராண்டாம் நினைவு நாளன்று திறக்கப்படவுள்ளயொட்டி மணிமண்டபம் கட்டும் பணிகள்  தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  ராமேசுவரம் பகுதியில் பிறந்த விஞ்ஞானியும்,மறைந்த முன்னாள் ஜனாதிபதியுமான  ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் சமாதி ராமேசுவரம் அருகே உள்ள பேக்கரும்பு பகுதியில் அமைந்துள்ளது. இந்த சமாதியை தினமும் ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனையொட்டியும்,பொதுநலவாதிகள்,இளைஞர்கள் ஆகியோர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு சமாதி வளாகத்தில் அப்துல்கலாமின் மணிமண்டபம் கட்டுவதற்கும்,அவரின் வாழ்கை வரலாறு குறித்து கண்காட்சி அமைக்கவும்,மாணவர்கள்,இளைஞர்கள் பயன்பெறும் வகையில் அறிவுசார் மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வந்தது.அதன்பேரில் பிரதமர் நரேந்திரமோடியின் உத்தரவின்பேரில் மத்திய அரசு
 ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல் கட்டமாக ரூ.15 கோடி செலவில் மணிமண்டபம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய மந்திரிகள் மனோகர் பாரிக்கர், வெங்கையா நாயுடு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். இப்பணிகள் தொடங்கி கடந்த  11 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த மணிமண்டபத்தை அப்துல்கலாமின்  இராண்டாம் நினைவு நாளான இம்மாதம் 27 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.மேலும் இந்த மணிமண்டபத்தை  பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.அதனையொட்டி ஐதராபாத், டெல்லி, ஜெய்ப்பூர், அரியானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களிலிருந்து  கிரானைட் கற்கள், கம்பிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதுபோல மணிமண்டத்தை சுற்றி 70 வகையான அழுகுச்செடிகளை கொண்டு ஆயிரத்துக்கு மேலான செடிகள் நட்டு பசுமை தோட்டமாக உருவாக்க மத்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.                                             

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து