முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் திட்டத்தின் சார்பில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் கலெக்டர் வெங்கடாசலம், வழங்கினார்:-

திங்கட்கிழமை, 10 ஜூலை 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மகளிர் திட்டத்தின் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு) சார்பில்  நடைபெற்ற நிகழ்ச்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் - திட்ட வாழ்க்கை திட்டத்தின் கீழ் தையல், கணினி, மின்(Electrician)  பணியாளர் பயிற்சி பெற்ற 250 நபர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  வழங்கினார்.
  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாவட்டத்தில் 2014-15 மற்றும் 2015-16-ஆம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் 15 நாட்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட நாட்களில் பணிமுடித்த குடும்பங்களைச் சார்ந்த நபர்களை தேர்வு செய்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத்திட்டம் - திட்ட வாழ்க்கை திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
  அதனடிப்படையில், மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயராம் கல்வி அறக்கட்டளை மூலம் 120 நபர்களுக்கும், சோசியல் மாஸ் சர்வீஸ் டிரஸ்ட் மூலம் 25 நபர்களுக்கும், கவிதாலாய சரவணன் கல்வி அறக்கட்டளை  மூலம் 25 நபர்களுக்கும், ஸ்ரீமாருதி அறக்கட்டளை மூலம் 25 நபர்களுக்கும், KI Infitech Services PVT Ltd மூலம் 30 நபர்களுக்கும், அமிர்தா அறக்கட்டளை மூலம் 25 நபர்களுக்கும் என மொத்தம் 250 நபர்களுக்கு தையல், கணினி, மின் (Electrician) பணியாளர் பயிற்சி அளிக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் பெற்ற பயிற்சியினை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,    இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர்  கல்யாண் சுந்தரம்  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  .ச.தங்கவேல்  உதவித்திட்ட அலுவலர்கள் திரு.செல்வராஜ்   தங்கபாண்டி   முருகேசன்  கவிதாலாயா சரவணன் கல்வி அறக்கட்டளை நிறுவனர் திருமதி.கவிதா  தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழுவினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து