வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

siva

 -சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சு.மலர்விழி, தலைமையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் விழிப்புணர்வு குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜுலை 10-ம் நாள் முதல் 15-ம் நாள் வரை திறன் மேம்பாட்டு வாரமாக சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் கொண்டாப்படுவது தொடர்பாக, முதற்கட்டமாக அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், ஊராட்சி ஒன்றியங்களிலும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக இணையதளத்தில் பதிவு செய்வது குறித்தும், பல்வேறு நிறுவனங்கள் வழங்கும் இலவச திறன் பயிற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பங்கு பெற்றனர் என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து