முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டென்னிஸ் வீரர் ஜோகோவிக்குடன் நடிகை தீபிகா படுகோன் காதல் !

திங்கட்கிழமை, 10 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

லண்டன் : டென்னிஸ் வீரர் ஜோகோவிக்குடன் நடிகை தீபிகா படுகோன் காதல் கொண்டுள்ளதாக, அவரது முன்னாள் காதலி தெரிவித்துள்ளார்.

புதிய செய்தி

தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்தவர் இந்தி நடிகை தீபிகா படுகோன். இவர் இந்தி பட ஹீரோ ரன்பீர் சிங்கை காதலித்து வருவதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால்,தற்போது புதிய செய்தி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல டென்னீஸ் வீரர்  ஜோகோவிக்கை, தீபிகா காதலித்துவருகிறார் என்பதுதான் அது.

முன்னாள் காதலி ...

இவர்கள் இருவரும் கடந்த வருடத்தில் இருந்து டேட்டிங்கில் இருப்பதாக, நோவோக்கின் முன்னாள் காதலி நடாசா பெக்வலக் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ’என்னைவிட்டு நோவோக் பிரிந்ததில் வருத்தமில்லை. தீபிகா படுகோனுடனாவது அவர் மகிழ்ச்சியாக இருக்கட்டும்’ என்று நடாசா கூறியுள்ளார்.

நோவோக், தனது தோழி ஜெலனாவை கடந்த 2014-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் நடாசா, இந்தக் காதல் விவகாரத்தைக் கூறியிருப்பது மேலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து