முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி என்.எஸ் கல்லூரியில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம்

செவ்வாய்க்கிழமை, 11 ஜூலை 2017      தேனி
Image Unavailable

தேனி -தேனி நாடார் சரஸ்வதி கலை கல்லூரியில் நேற்று ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா வரவேற்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட  டாக்டர் ஜெயசந்திரன் பேசும்போது, இரத்ததானம் செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும், மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியும், ஒரு உயிரை காப்பாற்ற பெரிதும் உதவுகிறது, உடலில் கொழுப்பை குறைத்து இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. புதிய இரத்த அணுக்களை உருவாக்குகிறது. மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது என்பது உள்ளிட்ட ரத்தத்தின் முக்கியத்துவம் குறித்தும், இரத்ததானம் செய்வதின் அவசியம் குறித்தும் சிறப்புரையாற்றினார். நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அமலா நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து