முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல் யாதவர் பேரவை சார்பில் வீரன் அழகுமுத்துகோன் குருபூஜை

செவ்வாய்க்கிழமை, 11 ஜூலை 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், -சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 268வது குருபூஜை விழா திண்டுக்கல்லில் யாதவ பேரவை சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திண்டுக்கல் கிருஷ்ணன் கோவில் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மாவட்ட யாதவர் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும் கொடியேற்றி வைத்தும் வணங்கினார். இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பகுதி செயலாளர் மோகன், யாதவர் பேரவை செயலாளர் மகேஸ்வரன், பொருளாளர் சுரேந்திரன், ஆறுமுகம், செல்வராஜ் உள்ளிட்ட யாதவர் பேரவையினர் பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து