முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமுதி அருகே மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ.56 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நடராஜன் வழங்கினார்

புதன்கிழமை, 12 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள காத்தனேந்தல் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் முனைவர் நடராஜன் ரூ.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்
 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், காத்தனேந்தல் கிராமத்தில் இன்று (12.07.2017) நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 220 பயனாளிகளுக்கு ரூ.56.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- அரசுத்துறை கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றிற்கு உடனடி தீர்வு காணும் விதமாக மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  அந்த வகையில் கமுதி வட்டம், காத்தனேந்தல் கிராமத்தில் நடைபெறும் இம்முகாம் குறித்து பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டு மொத்தம் 140 முன்மனுக்கள் பெறப்பட்டன.  மேலும் இன்று நடைபெறும் இம்முகாமில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பாக 220 பயனாளிகளுக்கு ரூ.56.98 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.  இதுதவிர, காத்தனேந்தல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ரூ.3.66 லட்சம் மதிப்பீட்டில் நூலக கட்டிடம் பராமரித்தல், ஆழ்துளை கிணறு அமைத்தல் உள்ளிட்ட 5 புதிய வளர்ச்சி பணிகளுக்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில் அனைத்து பணிகளும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
      மேலும், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் டெங்கு வைரஸ் காய்ச்சல் பரவுவதாக வந்த தகவலையடுத்து, நமது மாநிலத்தில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சி பகதிகளில் சுற்றுப்புற தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள சம்;பந்தப்பட்ட அலுவலர்களுக்;கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  பொதுமக்கள் தங்களது பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தமாக பராமரிப்பதோடு, குடிநீரை காய்ச்சி பருகிட வேண்டும். இதுதவிர 01.01.2017-ஐ தகுதி நாளாக கொண்டு பூர்;த்தியானவர்களை புதிய வாக்காளர்களாக பெயர் சேர்த்திடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இதற்காக 23.07.2017 அன்று மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ள தகுதியான வாக்காளர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி 31.07.2017க்குள் தங்களது பெயர்களை பதிவு செய்து பயனடையலாம். இவ்வாறு தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் (பொ) அமிர்தலிங்கம், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், சமூகபாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணின், மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் வ.முருகானந்தம் உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து