முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலாபவன் மணி மரணத்திலும் திலீபுக்கு தொடர்பு: மலையாள இயக்குநரின் பரபரப்பு குற்றச்சாட்டு

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

கொச்சி, கலாபவன் மணி மரணத்திலும்  நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக  மலையாள இயக்குநர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த பிப்ரவரி 17-ம் தேதி  நடிகை பாவனா கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போதே இதன் பின்னணியில் நிச்சயம் திரையுலக சக்திகள் இருப்பதாகக் கூறப்பட்டது.

பாவனாவைக் கடத்தி மானபங்கம் செய்து, அதை வீடியோ எடுத்த பல்சர் சுனிலும் கூட்டாளிகளும் கைதானதிலிருந்து போலீசார் விசாரணையை முடுக்க, அது திலீப் - காவ்யா மாதவன் வரை வந்து நிற்கிறது. மேலும் விசாரித்தால் சில சீனியர் நடிகர்கள்,  கூட சிக்கும் ஆபத்து இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக நடிகரும் அமைச்சருமான முகேஷ் மீது பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் கைதான திலீப் மீது வேறொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

கலாபவன் மணி மரணத்தில் திலீப்புக்கு தொடர்பு இருப்பதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் மலையாள பட இயக்குனர் ஒருவர் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இயக்குநரின் பரபரப்பு அறிக்கை

இயக்குநர் பைஜூ நேற்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் நடிகர் கலாபவன் மணியின் சாவுக்கு திலீப்தான் காரணம். அதற்கு உரிய ஆவணங்கள் என்னிடம் உள்ளன என்றும் கூறியுள்ளார்.
கொச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டாரகராவில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இதுகுறித்துப் புகார் அளிக்கப் போகிறாராம் பைஜூ.

கலாபவன் மணி மரணத்தில் பல சந்தேகங்கள் இருப்பதாகவும், திரையுலகினரே கூட காரணமாக இருக்கலாம் என்றும் ஆரம்பத்திலிருந்தே மணியின் உறவினர்கள் குற்றம் சாட்டிவந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்களால் கேரள திரையுலகம் பரபரத்துக் கிடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து