தக்காளி, வெங்காயம் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - சட்டசபையில் அமைச்சர் உறுதி

வியாழக்கிழமை, 13 ஜூலை 2017      தமிழகம்
sellur k raju

சென்னை : கூட்டுறவு மற்றும் பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் விற்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் அளித்தார்.

சட்டசபையில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

தற்போது விலைவாசி அதிகரித்து வருகிறது. தக்காளி, சிறிய வெங்காயம் ஆகியவை கிலோ ரூ.100-க்கு மேல் விற்கப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.எனவே அரசே இவற்றை கொள்முதல் செய்து கூட்டுறவு மற்றும் பசுமை அங்காடி மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் விற்கவும், இதன் மூலம் விலையை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


அமைச்சர் பதில்

வறட்சி மற்றும் பல்வேறு சூழ்நிலை காரணமாக தக்காளி, சிறிய வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. கிலோ ரூ.40-க்கு விற்கப்பட்டது. இதுபோன்ற காலங்களில் குறைந்த விலையில் காய்கறிகளை விற்பதற்காக மறைந்த முதல்-அமைச்சர் ரூ.100 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறார். அதை கொண்டு கூட்டுறவு மற்றும் பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலையில் காய்கறிகள் விற்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் நலன் கருதி கடந்த 31-5-17 வரை விவசாயிகளுக்கு ரூ.56.49 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து