முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐக்கிய ஜனதா தளம் உடைந்து விடும்: நிதிஷ்குமாருக்கு பாஸ்வான் அறிவுரை

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

பாட்னா : நிதிஷ் குமார், லல்லு பிரசாத் ஆகிய இருவருக்குமே முன்னர் நெருக்கமாக இருந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பிகாரில் மகாக்கூட்டணிக்கு இருக்கும் நெருக்கடியை கருத்தில் கொண்டு ஐக்கிய ஜனதா தளம் உடைந்து போக வாய்ப்புள்ளது, எனவே நிதிஷ் விரைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய ஐக்கிய ஜனதா தளம் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது.  ராஷ்டிரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க வாய்ப்புள்ளது. எனவே நிதிஷ் விரைந்து செயல்பட வேண்டும் .
ராம்விலாஸ் பஸ்வான்

இதுகுறித்து பேட்டியளித்த ராம்விலாஸ் பாஸ்வான், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ராஜினாமா செய்ய ஐக்கிய ஜனதா தளம் 4 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது, ஆனால் ஆட்சிக்கு ஆதரவளிப்போர் நிதிஷ் குமாரை விட யாதவ்வுக்கு ஆதரவாக உள்ளனர் என்றார்.

“இந்த நிலைமை 3-4 மாதங்களுக்கு நீடித்தால் பெரிதாகி விடும். எனவே இதனை வளரவிடாமல் நிதிஷ் குமார் தடுக்க வேண்டும். ராஷ்டிரிய ஜனதா தளம் ஐக்கிய ஜனதாதளத்தை உடைக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கு இன்னமும் வெகுஜன ஆதரவு அடிப்படை உள்ளது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்த போதே நான் இது இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காது என்று கூறினேன். ஏனெனில் ஒரு புறம் நல்லாட்சி என்ற ஹோதாவில் இறங்கியிருக்கும் நிதிஷ் குமார், மற்றொரு புறம் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள கட்சியினர். இது இந்த கூட்டணியின் உள்ளார்ந்த சந்தர்ப்பவாதத்தை பறைசாற்றுகிறது. இருவேறு கொள்கைகள் உடையவர்களுக்கிடையே அரசியல் புரிந்துணர்வு ஏற்படலாம். ஆனால் இங்கு விவகாரம் வேறு விதமானது. அதாவது பதவிக்கு வருவது பிறகு பணம் சம்பாதிக்க அதை துஷ்பிரயோகம் செய்வது என்பதாக இருக்கிறது.

மகாக்கூட்டணி தொடங்கிய நாளிலிருந்தே இந்தப் பனிப்போர் இருந்து வருகிறது. மொகமத் ஷஹாபுதீன் தொடர்பான விவகாரம் எழுந்த போதே இத்தகைய பனிப்போர் ஏற்பட்டு  உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

இந்நிலையில் நிதிஷ் குமார் தனது பெயரைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமா இல்லையா என்பதை சிந்திக்க வேண்டும். தேசிய ஜனநாயக் கூட்டணி ஆதரவை நிதிஷ் கேட்டாலும் வரவேற்கிறோம்.

நிதிஷ் குமாரைப் புரிந்து கொள்வது கடினமான விஷயம். செஸ் ஆட்டத்தைப் பார்த்தீர்களென்றால் ஒவ்வொரு காயும் ஒவ்வொரு விதமாக ஆடும். இதில் நிதிஷ் குமார் குதிரைக்காய் போல் தன்னை நகர்த்திக் கொள்பவர்.  இவ்வாறு பஸ்வான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து