மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரம் : 85 சதவீத இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
TN assembly 2017 07 01

Source: provided

சென்னை :  மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கான 85  சதவீத  இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியிருக்கும் நிலையில், தமிழகத்தில் இருக்கும் மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களில், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருந்தது.

இது தமிழக அரசுப் பள்ளி மற்றும் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவ மாணவிகள் மத்தியில் பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. தமிழக அரசின் இந்த ஆணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.


மேலும், இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளைப் பின்பற்றாமல் தமிழக அரசு, மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கும் அரசாணையைப் பிறப்பித்துள்ளது. இதனால், மொத்த மருத்துவ மாணவர் சேர்க்கையில் வெறும் நூறு இடங்களை மட்டுமே சி.பி.எஸ்.இ முறையில் படித்த மாணவர்கள் பிடிக்க முடியும். எனவே இதனை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், தமிழக மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மாநில அரசு உள்ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் வழங்கியுள்ளது என்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85  சதவீதம்  இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில் தமிழக மாணவ மாணவிகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து நேற்று சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், நீதிமன்றத்தின் உத்தரவு நகல் கிடைத்தபிறகு அரசு சார்பில் அப்பீல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து