ஜனாதிபதி தேர்தல் ஏற்பாடு: சட்டசபை வளாகத்தில் ராஜேஷ் லக்கானி நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      தமிழகம்
Rajesh lakkani 2017 01 25

சென்னை, ஜனாதிபதி தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் வருகிற 17-ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் சென்று தேர்தல் பார்வையிட்டார்.

17-ம்தேதி ஓட்டுப்பதிவு

ஜனாதிபதி தேர்தலையொட்டி சட்டசபை வளாகத்தில் ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரி ஆய்வு செய்தார். நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வருகிற 17-ம் தேதி நடக்கிறது. பாராளுமன்ற வளாகம், மாநில சட்டசபை வளாகங்கள் ஆகிய இடங்களில் ஓட்டுப் பதிவு நடைபெறும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் இந்த தேர்தலில் வாக்களிக்கிறார்கள். சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை வளாகத்தில் உள்ள அறையில் வருகிற 17-ம்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


அதிகாரி நேரில் ஆய்வு

நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் சென்று தேர்தல் ஏற்பாடுகளை பார்வையிட்டார். ஜனாதிபதி தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் நடைபெறுகிறது. இதில் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்த், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார்கள். அவர்களது பெயர்களுடன் கூடிய வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள சட்டசபை அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. சென்னைக்கு விமானத்தில் ஓட்டுச்சீட்டுகள் வந்தன. அவை பலத்த பாதுகாப்புடன் அறையில் வைக்கப்பட்டுள்ளது. அறை முன் 24 மணி நேரமும் போலீசார் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாட்டையும் ராஜேஷ் லக்கானி பார்வையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து