முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாருக்கான திறன்வளர்ப்பு பயிற்சி முகாம் ராமநாதபுரத்தில் கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 14 ஜூலை 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் போலீசார், சமூகபாதுகாப்புத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலகு உள்ளிட்டோருக்கான திறன்வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
  ராமநாதபுரம் ராமநாதபுரம் இன்பன்ட் ஜூசஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் சார்பாக சிறப்பு சிறார் காவல் அலகு குழந்தைகள் நல அலுவலர்களுக்கான திறன்வளர்ப்பு பயிற்சி முகாமினை கலெக்டர் முனைவர் நடராஜன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர் இன்பமணி முன்னிலை வகித்தார். முகாமில் கலெக்;டர் தெரிவித்ததாவது:- பதின் பருவத்தில் உள்ள சிறார்கள் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாகவோ, கூடா நட்பின் விளைவாகவோ சமயத்தில் குற்ற செயல்களில் ஈடுபடும் சூழ்நிலை ஏற்படுகின்றது.  இத்தகைய குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களை உளவியல் ரீதியாக கையாண்டு குற்றச் செயல்களில் ஈடுபடாத வகையில் திருத்தி சமுதாயத்தில் சிறந்த குடிமகன்களாக உருவாக்குவது நமது கடமையாகும். 
 அதனடிப்படையில் இன்றைய தினம் சமூகப் பாதுகாப்பு குறித்தும், குழந்தைப் பருவம் பாதுகாப்பது குறித்தும் காவல்துறையினைச் சார்ந்த குழந்தைகள் நல அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.  இளைஞர்கள் சட்டத்திற்கு புறம்பாக தவறுகள் செய்யும் பொழுது இளைஞர் நீதிச்சட்டத்தின்படி, காவல் துறை அலுவலர் மற்றும் சமூக நல அலுவலர் ஆகியோர் அடங்கிய குழு சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக குற்ற செயல்களில் ஈடுபடும் குழந்தைகளை, குற்றவாளிகள் போல் நடத்தாமல்  அவர்களை திருத்தும் விதமாக விசாரணை இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு இந்த பயிற்சியானது நடைபெறுகிறது.  
 மேலும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாக பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2012, இளைஞர் நீதிச்சட்டம் - 2015  உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள்; செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அலுவலர்களுக்கு இச்சட்டங்கள் குறித்து முழுமையாக விளக்கம் அளிக்கப்படுகின்றது.  இம்முகாமில் வழங்கப்படும் கருத்துகளை ஆழமாக கற்றறிந்து, குற்ற செயல்களில் ஈடுபடும் இளம் சிறார்களை தண்டிப்பது நமது நோக்கமல்ல, அவர்களை நல்வழிப்படுத்துவதே நமது நோக்கம்  என்பதை தலையாய சிந்தனையாக கொண்டு சிறப்பு சிறார் காவல் அலகின் குழந்தைகள் நல அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர்,சார்பு நீதிபதி சி.சொர்ணக்குமார், மாவட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் (சிறப்பு சிறார் காவல் அலகு) காந்திமதிநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன், குழந்தைகள் நல குழுத் தலைவர் ஆர்.சகுந்தலா உள்பட  காவல்துறை குழந்தைகள் நல அலுவலர்கள், சமூகப்பணியாளர்கள் கலந்து  கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து