சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா

sivagangai 0

சிவகங்கை, சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பள்ளிச் செயலர் சேகர் அவர்கள் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார்கள். நகர் காவல் ஆய்வாளர் மோகன்; முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றினார்கள்;. மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்தசாரதி அவர்கள் விழாவில் கலந்துகொண்டு காமராஜர் வாழ்க்கை பற்றி எடுத்துரைத்தார்கள். மேலும் சிவகங்கை சிட்கோ கிளையின் மேலாளர் சசிகலா அவர்களும் மற்றும் அட்வகேட் ஸ்ரீதரன்; உடற்பயிற்சி பயிற்றுனர் பரமசிவம் ஆகியோரும் கலந்துகொண்டனர். மாணவி சுவாதி காமராஜர் பற்றி உரையாற்றினார். மேலும் புதிதாக கட்டப்பட்ட சாம்பவிகா மேல்நிலைப்பள்ளியின் நுழைவு வாயிலை ஆய்வாளர் மோகன் அவர்களும் சாம்பவிகா நர்சரி பள்ளியின் வளாகத்தில் அமைந்த காணொளி கல்விக்கான வகுப்பறையை மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பார்த்;தசாரதி அவர்களும் திறந்து வைத்தார்கள். விழா சம்பந்தமாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் முத்துக்குமார், ஆசிரியர்கள் சுப்பிரமணியன், சக்திவேல், பாலச்சந்தர், ராஜு, முத்துமுருகன், சத்தியேந்திரன், மதிவாணன், நவனீதன,; சதீஸ், செல்வக்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து