முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிக்கிறது : தம்பிதுரை குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 15 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

கோவை : மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு பறிப்பது நல்லதலல் என்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை கூறியுள்ளார்.

இது தொடர்பாக கோவையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது ,  ''நீட் தேர்வில் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்றாகி விட்டது. ஒரே தேசம் ஒரே வரி என்று மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஜிஎஸ்டியிலும் மாநில அரசின் உரிமை பறிக்கப்பட்டு விட்டது. பிறகு தமிழ்நாடு என்ன மத்திய அரசிடம் பிச்சை எடுப்பதா?

முன்னதாகவே பல திட்டங்களுக்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வராமல் அவதிப்படுகிறோம். பல்வேறு விவகாரங்கள் குறித்து கடிதம் எழுதியும் பதில் இல்லை. மீண்டும் மீண்டும் மாநில அரசின் உரிமைகள் மத்திய அரசால் பறிக்கப்படுகின்றன. அது நல்லதல்ல'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து