தமிழக அரசு பற்றி அவதூறு பேசுவதை நிறுத்தாவிட்டால் கமல்ஹாசன் மீது வழக்கு - அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரிக்கை

சனிக்கிழமை, 15 ஜூலை 2017      தமிழகம்
S P Velumani 2017 7 15

சென்னை : தமிழக அரசு பற்றி தொடர்ந்து அவதூறு பேசிவரும் நடிகர் கமலஹாசன், அதை நிறுத்தாவிட்டால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி எச்சரித்துள்ளார்.

காவல் ஆணையரிடம் மனு ....

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள காயத்ரி ரகுராம், 'சேரி பிஹேவியர்' என்று இழிவாக பேசினார். இதற்கு மக்களிடம் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் கமலஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத், சென்னை காவல் துறை ஆணையரிடம் மனு அளித்தார். திருமாவளவன், கிருஷ்ணசாமி உள்ளிட்ட தலைவர்களும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ஊழல் குற்றச்சாட்டு

இந்த சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வர, செய்தியாளர்களை கமல் சந்தித்து பேசினார். அப்போது அவர் தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்து விட்டதாகக் குற்றம்சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாகப் பொதுவாகப் புகார் கூறக் கூடாது. எந்தத் துறையில் ஊழல் இருக்கிறது என்று நடிகர் கமல் குறிப்பிட்டுக் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அமைச்சர் எச்சரிக்கை

கமலின் இந்த கருத்து குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறுகையில் சமீபலகாலமாக கமல் ஆதாரமில்லாமல் பேசி வருகிறார். சினிமாவுக்கு கேளிக்கை வரி பிரச்சினை தொடர்பாக பேசுவதற்கு திரைதுறையினர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதை கமல் நன்கு தெரிந்திருந்தும் இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை ஏன் முன்வைக்கிறார். அதிமுக அரசை குறை கூறுவதை கமலஹாசன் இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும். எங்கள் அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. கமலஹாசன் இதுவரை அவர் நடித்த படங்களுக்கு எவ்வளவு வரி கட்டினார் என்பதை அவர் விளக்குவாரா? ஆய்வு செய்யட்டுமா? என்றார்.  மேலும், இதுபோன்ற அவதூறு பேச்சுக்களை அவர் தொடர்ந்தால் வழக்குத் தொடரப்படும் என்று எச்சரித்தார்.

அறுவறுக்கத்தக்க நிகழ்ச்சியில் ...

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார். கமல்ஹாசன் அரசை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹெச் ராஜா அறுவறுக்கத்தக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்துகொண்டுள்ளதாக கூறினார். அறுவறுப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அவர் எதற்கு அரசை விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் ஹெச் ராஜா தெரிவித்தார். 

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து