முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: 8 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரரானார் அம்லா

சனிக்கிழமை, 15 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

நாட்டிங்காம் : நாட்டிங்காமில் நடைப்பெற்று வரும் தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரரானார் அம்லா. மேலும் அம்லா, டி காக், பிலாண்டர் அரைசதம் அடித்தனர்.

2-வது டெஸ்ட் ...

தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணியில் டீன் எல்கரின் (6 ரன்) விக்கெட்டை வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். சொந்த மண்ணில் அவரது 300-வது விக்கெட் இதுவாகும்.

8 ஆயிரம் ரன் ...

இதன் மூலம் உள்ளூரில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 4-வது வீரர், வேகப்பந்து வீச்சாளர் அளவில் முதலாமானவர் என்ற சிறப்பை அவர் பெற்றார். மற்றொரு தொடக்க வீரர் ஹெய்னோ குன் 34 ரன்களில் கிளன் போல்டு ஆனார். இதன் பின்னர் ஹசிம் அம்லாவும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கும் இணைந்து அணியை தூக்கி நிறுத்தினர். அம்லா 10 ரன் எடுத்த போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார்.

306 ரன்கள் ...

அணியின் ஸ்கோர் 179 ரன்களை எட்டிய போது டி காக் 68 ரன்களில் கேட்ச் ஆனார். தொடர்ந்து அம்லா 78 ரன்களிலும், கேப்டன் பிளிஸ்சிஸ் 19 ரன்களிலும், பவுமா 20 ரன்களிலும் வெளியேறினர். 88 ஓவர் முடிந்திருந்த போது தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் சேர்த்து இருந்தது. அப்போது பிலாண்டர் (53 ரன்), கிறிஸ் மோரிஸ் (21 ரன்) களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து