முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலகிருஷ்ணா கலந்துகொண்ட முதல் விழா `கெளதமி புத்ர சாதகர்ணி' இசை வெளியீட்டு விழா

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      சினிமா
Image Unavailable

Source: provided

பாலகிருஷ்ணா இவர் தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி. இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

பாலகிருஷ்னா இவர் தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. மற்றும் விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சி.கல்யான், காட்ரகட்ட பிரசாத், படத்தின் இயக்குனர் கிரிஷ், படத்தின் தயாரிப்பாளர் ரகுநாத்,நரேந்திரா, y.ராஜீவ் ரெட்டி, ஜகர்ல முடி சாய்பாபு, பிபோ ஸ்ரீநிவாஸ், மற்றும் கிருஷ்ணாரெட்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசும் போது...
நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி நானும் உங்களில் ஒருத்தன் தான் சென்னையில் பிறந்தவன் சென்னையில் வளர்ந்தவன் தமிழ் நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.

எதுவும் சரியா வரலே டைரக்டர் கிருஷ் இந்த கதையை சொன்னார் உடனே ஒகே சொன்னேன். இது நம்மளை ஆண்ட ஒரு நம் மன்னனின் கதை. இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்க இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது..இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும் பெரியவங்க ஆசியும் தான். இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது.

அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம்.. அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன்..சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது..நானும் உங்களில் ஒருத்தன் தான்.. இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணா தமிழில் பேசினார்.மற்றும் கே.எஸ். ரவிகுமார் நடிகர் கார்த்தி, இயக்குனர் கிருஷ், இசையமைப்பாளர் பட் தயாரிப்பாளர் நரேந்திரா, வசனகர்த்தா மருதபரணி மற்றும் சி.கல்யாண் காட் ரகட்டா பிரசாத் உட்பட பலர் பேசினார்கள்.

இசையை கார்த்தி வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து