முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலை உயர்வினால் ஹோட்டல்களில் தக்காளி பயன்பாடு நிறுத்தம்:சுவை மாற்றத்தால் பொதுமக்கள் ஏமாற்றம்:

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-தக்காளியின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதன் காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் தக்காளியின் பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள சுவை மாற்றத்தால் பொதுமக்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பருவமழை பொய்த்துவிட்டதன் எதிரொலியாக ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தக்காளி உற்பத்தி முற்றிலுமாக குறைந்து போய்விட்டது.இதனால் கடந்த ஒருவார காலமாக தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.ஒருகிலோ ரூ.5 முதல் ரூ.10 வரையில் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை தற்போது ஒருகிலோ ரூ.120வரை சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.இருப்பினும் சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுவதால் அதன் விலை மேலும் அதிகரித்திடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.இருப்பினும் தக்காளியின் விலையை குறைத்து பொதுமக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்திட தமிழக அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தக்காளி விலை உயர்வு காரணமாக மதுரை மாவட்டத்திலுள்ள ஹோட்டல்களில் தக்காளியின் உபயோகம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.குறிப்பாக பொதுமக்கள் விரும்பி சுவைத்திடும் தக்காளி சூப்,தக்காளி சாதம்,தக்காளி ரசம்,தக்காளி சட்னி உள்ளிட்ட பல்வேறு உணவு ஐயிட்டங்களை ஹோட்டல் நிர்வாகம் முழுமையாக நிறுத்தி யிருப்பதுடன் சாம்பார்,குழம்பு,தால்சா,பிரியாணி,பிரைடுரைஸ்,சைட்டிஷ் போன்ற உணவுகள் தயாரிக்கும் போது வேறு வழியின்றி பெயரளவில் தக்காளியை சேர்த்திடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.ஹோட்டல்கள் மேற்கொண்டுள்ள இந்த சிக்கன நடவடிக்கையினால் தக்காளி சுவையில்லாத உணவு பண்டங்களை தாங்கள் வேறு வழியின்றி சாப்பிட வேண்டியிருப்பதாக பொதுமக்கள் அங்கலாய்ப்புடன் தெரிவித்தனர்.விரைவில் தக்காளி விலை குறைந்திடும் அப்போது அனைத்து தக்காளி கலப்பு ஐயிட்டங்களை ஒரு வெட்டு வெட்டிடலாம் என்பதே தக்காளி பிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து