முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் சிவஞானம், தலைமையில் வரதட்சணை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிலரங்கம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் .-மாணவிகள் எந்த ஒரு செயலையும், முழுமையாக தெரிந்துகொண்டு செயல்படுத்த வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை
 விருதுநகர் மாவட்டம் சமூக நலத்துறை சார்பில் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்;லூரியில் வரதட்சணை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில் இன்று(13.07.17) நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்   தெரிவித்;ததாவது:-
ஒவ்வொரு வருடமும் நவம்பர்-26ம் நாள் வரதட்சணை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நமது நாட்டில் குழந்தைத் திருமணம் மற்றும் வரதட்சணை கேட்டு பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதும், 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். வரதட்சணை கேட்பதும், வரதட்சணை கொடுப்பதும் சட்டத்திற்கு புறம்பானதாகும்.  பல பெண்கள் வரதட்சணைக் கொடுமையினால் சமுதாயத்தில் இழிநிலைக்கு தள்ளப்படுகின்றனர். வரதட்சணையை ஒழிப்பதற்காக இந்திய அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது.  ‘பெண் கல்வியானது உயரிய நிலையை அடையும்போது வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட சமுதாய சீர்கேடுகள் களையப்படும்”.  ஆண்களுக்கு நிகராக பெண்களும்; அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். பெண்களின் சிறப்பை மேம்படுத்தும் விதமாக ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.  
 மேலும் பெண்களுக்கென்று தமிழக அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களாக மகளிர் எழுத்தறிவுத் திட்டம், தொட்டில் குழந்தைத்திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்திடும் வகையில் 13 அம்ச திட்டம், 24 மணி நேரம் மகப்பேறு மருத்துவ சேவை அளிக்கும் திட்டம், ஏழைப்பெண்களின் திருமணம் ஏழ்மையின் காரணமாக தடைபட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்பதற்காகவும் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 8 கிராம் தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவித்திட்டம், பெண்களின் பொருளாதார நிலையை தாங்களே உயர்த்திக் கொள்ளும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைத்து மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கும் திட்டம், கிராமப்புற பெண்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தி வருகின்றது.  எனவே, பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை கருத்திற்கொண்டு பெண் குழந்தைகள் பள்ளிக்கு அனுப்பி, கல்வியில் சிறந்து விளங்கிட வேண்டும்  என்ற இலட்சிய உணர்வோடு செயல்பட்டால் இத்தகைய சமுதாய சீர்கேட்டினை களையலாம். ‘பெண்கள் நாட்டின் கண்கள்” எனும் நோக்கில் இன்றைய சமுதாயத்தில் வாழ்க்கை முறையை மாற்றி வாழ கற்றுக் கொண்டால் இது போன்ற பல்வேறு சமுதாய வன்முறைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும், மேலும், மாணவிகள் தங்களது பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து என்னென்ன சட்ட விதிகள் உள்ளன என்று நன்கு தெரிந்துகொள்ள வேண்டும் என்றும், பிறரிடம் சொல்லும் கருத்துக்களை தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றும், பிரச்சனையை கையாளுவதற்கு தங்களின் திறமைகளையும், ஒருவருக்கொருவர் விட்டு கொடுக்கும் மனப்பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும், மேலும், மாணவிகள் எந்த விஷயத்தை யாரிடம் கேட்டால் தெரிந்துகொள்ளலாம்; என்றும் முதலில் தெரிந்துகொண்டு, அவர்களிடம் தங்களின் ஆக்கப்பூர்வமான சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்துகொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
 பின்னர், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு வரைபடம் மற்றும் ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,  பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்கள்.
 இக்கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி.குணசேகரி, திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) திருமதி.பத்மாசனி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(சட்டப்பணிகள்) திருமதி.சுப்புலட்சுமி, வட்டாட்சியர்(விருதுநகர்) திரு.சையது இப்ராகிம் ஷா, முதல்வர்(வே.வ.வ. கல்லூரி) திருமதி. மீனாராணி, அரசு அலுவலர்கள் மற்றும் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து