பசு பாதுகாப்பு பெயரில் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை: பிரதமர் மோடி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      இந்தியா
modi 2017 5 7

புதுடெல்லி : பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார். மேலும் அவர், "பசு பாதுகாப்புக்கு அரசியல் அடையாளம் ஏற்படுத்துவதோ மதச் சாயம் பூசுவதோ ஏற்புடையது அல்ல. இதனால், தேசத்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. பசுவை அன்னைக்கு நிகராக மதிக்கும் நம்பிக்கை நம் தேசத்தில் பரவிக்கிடக்கிறது. ஆனால், அதற்காக சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது" என்றார்.

"பசு பாதுகாப்புக்கு அரசியல் அடையாளம் ஏற்படுத்துவதோ மதச் சாயம் பூசுவதோ ஏற்புடையது அல்ல.  தேசத்துக்கு எந்த ஆதாயமும் இல்லை. பசுவை அன்னைக்கு நிகராக மதிக்கும் நம்பிக்கை நம் தேசத்தில் பரவிக்கிடக்கிறது. அதற்காக சட்டத்தை கையில் எடுப்பதை அனுமதிக்க முடியாது.  - பிரதர் நரேந்திர மோடி

இன்று  பாராளுமன்ற  மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். கூட்டத்துக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நாக்வி, "அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்க தயாராக இருக்கிறோம். எங்களது தேவையெல்லாம் நாடாளுமன்ற கூட்டத்தொடர் சுமுகமாக ஆக்கபூர்வமாக நடைபெற வேண்டும் என்பதே" என்றார்.


கூட்டத்தைப் புறக்கணித்த திரிணமூல்:

அனைத்துக் கட்சி கூட்டத்தை திரிணாமூல் காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அண்மையில் மேற்குவங்கத்தின் 24 பர்கானாஸ் பகுதியில் ஏற்பட்ட மதக்கலவரத்துக்கு பாஜகவின் சதியே காரணம் என திரிணாமூல் காங்கிரஸ் பகிரங்கமாக குற்றஞ்சாட்டிவந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது. . 


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து