முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் நியூசிலாந்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூலை 2017      விளையாட்டு
Image Unavailable

பெர்பி : 11-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை சந்தித்தது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கியது இந்திய அணி.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணிக்கு, ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீராங்கனைகள் ராட் 4 ரன்களிலும், மந்தனா 13 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். பின்னர் இணைந்த கேப்டன் மிதாலி ராஜும், ஹர்மன்ப்ரீத் கவுரும் நிதானமாக ரன் சேர்த்தனர். 3-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்புக்கு இந்த ஜோடி 132 ரன்கள் சேர்த்த நிலையில், கவுர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இதைத் தொடர்ந்து ஆட்டத்தை தன்கையில் எடுத்துக்கொண்டார். சிறப்பாக விளையாடிய கேப்டன் மிதாலி ராஜ், தனது 6-வது சதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் வேதா கிருஷ்ணமூர்த்தியும் அதிரடியில் இறங்க, இந்தியாவின் ரன் வேகம் உயர்ந்தது. கடைசி ஓவரில் மிதாலிராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, பாண்டே ஆகியோர் ஆட்டமிழக்க இந்திய மகளிர் அணி, 50 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து, 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய வீராங்கனை ராஜேஸ்வரியின் அபார பந்துவீச்சில் சிக்கி நிலைகுலைந்தது. இதிலிருந்து மீள முடியாத நியூசிலாந்து அணி, 25 புள்ளி 3 ஓவர்களிலேயே 79 ரன்களுக்குள் சுருண்டது. இதனால், 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியது. அபாரமாக பந்துவீசிய ராஜேஸ்வரி, அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். 109 ரன்கள் விளாசி இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட மிதாலிராஜ், ஆட்டநாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து