முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்றத்தில் அரசியல் கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதத்தில் ஈடுபடும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி எம்.பி. பரூக் அப்துல்லா பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையொட்டி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்ற இருசபைகளும் இன்று மீண்டும் கூடுகிறது. கூட்டத்தில் ஜிஎஸ்டி, இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் பாராளுமன்றத்தில் அமளி ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி நம்பிக்கை

இந்தநிலையில் பாராளுமன்ற இருசபைகளும் அமைதியாக நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை ஒருங்கிணைந்து செயல்படுத்தியிருப்பது பாராளுமன்றத்தின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்றும் அரசியல் கட்சிகள் ஆக்கப்பூர்வமான முறையில் விவாதத்தில் ஈடுபடும் என்றும் பிரதமர் மோடி  நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

70 ஆண்டுகள் நிறைவு

பாராளுமன்றம் இன்று (நேற்று) கூடியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த கூட்டத் தொடரில் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். மேலும் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. மழைகால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பருவமழை தொடங்கிவிட்டால் நமக்கு எப்படி நம்பிக்கை ஏற்படுகிறதோ அதே மாதிரி இந்த கூட்டத்தொடர் நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கோடை காலம் முடிந்து நல்ல வாசனையுடன் பூமியை மழை நனைக்கிறது. அதேமாதிரிதான் ஜிஎஸ்டி என்ற மழையால் இந்த கூட்டத்தொடர்  மிகவும் உற்சாகத்துடன் நடக்கும்.

ஒத்துழைப்பு கொடுக்க ...

அரசியல் கட்சிகளை சேர்ந்த அனைத்து எம்.பி.க்களும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நல்ல முக்கியமான முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நாகரீகமாகவும் தரமாகவும் எம்.பி.க்கள் விவாதத்தில் ஈடுபடுவார்கள். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து நாட்டிற்காக பணியாற்றினால் ஜிஎஸ்டியால் சாதனையை ஏற்படுத்தலாம். ஜிஎஸ்டி முறை துவக்கத்திலே நன்றாக இருக்கிறது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மோடி நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து