ரயில்வே அமைச்சக தொடர்புடைய 66,000 வழக்குகள் நிலுவையில் உள்ளது: சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Ravi Shankar Prasad 2017 03 18

புதுடெல்லி, ரயில்வே அமைச்சகம் தொடர் புடைய சுமார் 66 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்ட அமைச்சர்  ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். வழக்குகளில் ரயில்வே துறை முதலிடம் வகிக்கிறது.

சேவை குறைபாடு, தனியார் நிறுவனங்களுடனான கருத்து வேறு பாடு, இரு அரசு துறைகளுக் கிடையிலான பிரச்சினை, இரு அரசு நிறுவனங்களுக்கிடையி லான பிரச்சினை சார்ந்த வழக்கு கள் இவற்றில் அடங்கும். சட்ட அமைச்சகத்தின் ஆவணத்தில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட தகவல் நிர்வாகம் மற்றும் சுருக்க முறை (எல்ஐஎம்பிஎஸ்) என்ற இணையதளத்தில் இடம்பெற் றுள்ள தகவலை மேற்கோள்காட்டி சட்ட அமைச்சகம் இந்த ஆவ ணத்தை வெளியிட்டுள்ளது.


இதன்படி, கடந்த ஜூன் 12-ம் தேதி நிலவரப்படி நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் தொடர் புடைய 1,35,060 வழக்குகளும் அரசு அல்லது அதிகாரிகளுக்கு எதிரான 369 அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதிகபட்ச மாக ரயில்வே அமைச்சகம் சார்ந்த 66,685 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 10 ஆண்டு களுக்கும் மேலாக 10,464 வழக்கு கள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்ற சுமையை குறைக்க நன்கு யோசித்தப்பிறகு வழக்கு தொடுக்கும்படி பல்வேறு அமைச்சர்களுக்கு சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கடிதம் எழுதி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து