மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை பயனாளிகளுக்கு தேனி கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      தேனி
theni news

     தேனி .-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து  கோரிக்கை மனுக்களை  பெற்று குறைகளை  கேட்டறிந்து, 19 பயனாளிகளுக்கு ரூ.1,11,050 மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  கேட்டுக்கொண்டார்.
 கூட்டத்தில், மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை 11 பயனாளிகளுக்கு தலா ரூ.8,500 - மதிப்பிலும், ஏழை விதவை தாய்மார்களின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு ரூ.450  மதிப்பில் 5 மாணாக்கர்களுக்கு குறிப்பேடுகளையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.5,100  மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தினையும் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு ரூ.1,11,050 - மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  வழங்கினார்.
       இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள்  மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா  மாவட்ட சமூகநல அலுவலர் (பொ) திருமதி.ராஜராஜேஷ்வரி   மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரகுபதி   உதவி இயக்குநர் (கனிமம்) .சாம்பசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து