திரு.வி.க.பள்ளியின் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளை ஆணையாளர் அனீஷ் சேகர், துவக்கி வைத்தார்.

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      மதுரை
mdu news

மதுரை- மதுரை மாநகராட்சி திரு.வி.க.மேனிலைப்பள்ளியின் சார்பில் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் மேலூர் கல்வி மாவட்ட விளையாட்டுக் கழகம் “அ” குறுவட்ட விளையாட்டு விழாவில் விளையாட்டு போட்டிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,  துவக்கி வைத்து பேசியததாவது :
 பள்ளி மாணவ, மாணவிகளின் வளர்ச்சியில் பள்ளிகளிலிருந்து படிப்பது மட்டும் அல்லாமல் விளையாட்டு போட்டிகளும் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. விளையாட்டு என்று இருந்தால் ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். விளையாட்டுப் போட்டியில் கடைசி இடம் வருபவர்கள் கூட தாமும் முதல் இடத்திற்கு வர வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். இது மாணவர்கள் படிப்பதற்கும் ஒரு ஊக்குவிப்பு ஆக இருக்கும். இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும். எனவே அனைத்து மாணவர்களும் இதுபோன்ற விளையாட்டு போட்டிகளில் பங்றே;று வெற்றி பெற வேண்டும். இந்த விளையாட்டு போட்டியில் மாநகராட்சி பள்ளிகள் மட்டுமல்லாது அரசுப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளும் பங்கேற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மாணவர்களாகிய நீங்கள் விளையாட்டு போட்டிகள் போன்ற இதர போட்டிகளிலும் கலந்து கொண்டு உங்கள் திறமையை வெளிக்கொணர வேண்டும் என்றார்.
 முன்னதாக விளையாட்டு போட்டி ஒலிம்பிக் சுடரினை ஆணையாளர் அவர்கள் ஏற்றி வைத்து விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். திரு.வி.க. மேனிலைப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர்  என்.மாரி முத்து, மாநகராட்சி கல்வி அலுவலர் திருமதி.சரஸ்வதி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு.பி.செங்கதிர், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.எஸ்.முருகன், மக்கள் தொடர்பு அலுவலர் திரு.சித்திரவேல், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.ஆர்.ஜோதிராம், திரு.வி.க.பள்ளி தலைமைஆசிரியர் திருமதி.எஸ்தர் எம்மா ஆலிவ் உட்பட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர். கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து