வெடி விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தோர்களுக்கு .நிதியுதவி கலெக்டர் சிவஞானம், வழங்கினார்.

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      விருதுநகர்
vnr news

  விருதுநகர்.- விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில்  மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக  மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
 முன்னதாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி ராகவேந்திரா பயர் ஒர்க்ஸ்சில் 20.10.2016 அன்று நடைபெற்ற வெடி விபத்தின் போது அருகில் இருந்த தேவகி ஸ்கேன் சென்;டரில் பணிபுரிந்த திருத்தங்கலைச் சேர்ந்த மருத்துவர் ஜானகிராம், வெம்பக்கோட்டை வட்டம், நதிக்குடியை சேர்ந்த பாஸ்கர், சிவகாசி வட்டம், ஆனையூரை சேர்ந்த காமாட்சி மற்றும் புஷ்பலட்சுமி, சிவகாசியை சேர்ந்த வளர்மதி மற்றும் பத்மலதா, சிவகாசி வட்டம், செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்த சொர்ணகுமாரி மற்றும் தேவி  விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்காபுரத்தை சேர்ந்த ராஜா ஆகிய ஊழியர்கள்  உட்பட 9 நபர்கள் உயிரிழந்தார்கள். இந்த வெடி விபத்தின்போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாண்புமிகு பாரத பிரதமரின் நிவாரண நிதியிலிருந்து ஒரு நபருக்கு தலா ரூ.2 இலட்சம் வீதம் மொத்தம்  9 நபர்களுக்கு ரூ.18 இலட்சத்திற்க்கான காசோலைகளையும், மேலும் இந்த வெடி விபத்தில் காயமடைந்த 15 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்க்கான காசோலைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள். மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் 15 பயனாளிகளுக்கு ரூ.68,400 மதிப்பிலான இலவச சலவைப் பெட்டிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.
 இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சி.முத்துக்குமரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொ)  .அன்புநாதன், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம்  முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் .செந்தில் ஆறுமுகம், மாவட்ட பிற்படுத்தப்பட்;டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  .பார்த்திபன், உதவி ஆணையர் (கலால்) திரு.சங்கரநாராயணன், உட்பட பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து