வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டியில் காமராஜரின் 115 வது பிறந்த நாள் விழா

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      திண்டுக்கல்
byl news

வத்தலக்குண்டு, -திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகேயுள்ள பட்டிவீரன்பட்டி ரேடியோ மைதானத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு பட்டிவீரன்பட்டி காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜாராம் மாலை அணிவித்தார். பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி. பள்ளிகளின் சார்பில் ஆண்கள் பள்ளி திடலில் காமராஜரின் பிறந்த தின விழா மற்றும் பல்வகை மன்றங்களின் துவக்கவிழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு என்.எஸ்.வி.வி பள்ளிகளின் மேலாண்மை குழுத்தலைவர் ராஜராம் தலைமை தாங்கினார். பள்ளி செயலர் அய்யனார்வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார் வரவேற்றார். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக சன் டி.வி காமெடி ஜங்ஷன் புகழ் சித்தேந்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவ,மாணவிகள் காமராஜர் தமிழகத்திற்காக ஆற்றிய பணிகள் மற்றும் சிறப்புகளைப்பற்றி எடுத்துரைத்தனர். மேலும் இவ்விழாவில் பட்டிவீரன்பட்டி இந்து நாடார்கள் உறவின்முறை சங்க செயலர் சங்கரலிங்கம், என்.எஸ்.வி.வி. மெட்ரிக் பள்ளி செயலர் பிரசன்னா, மெட்ரிக் பள்ள¤ முதல்வர் ஆத்தியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். சித்தரேவு அரசு ஆரம்பப்பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு ஆத்து£ர் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி மாணவ,மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்கினார். இவ்விழாவில் முன்னாள் சித்தரேவு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நமகோடி, ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து