முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவு பகலாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் - நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி ரிசர்வ் வங்கி கவர்னர் விளக்கம்

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி :  பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜரான ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் உயர்மதிப்பு கொண்ட 500, 1000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெருவதாக பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதையடுத்து பழைய நோட்டுக்கள் திரும்ப பெறப்பட்டு புதிய 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் செய்யப்பட்டன. புதிய நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் முன்பாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

பழைய ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் இறுதி வரை வங்கிகளில் செலுத்தி மாற்றிக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது. இதனையடுத்து வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்து பணத்தை மாற்றினர்.

நிதித்துறைக்கான நாடாளுமன்றக் குழு

இந்த நிலையில் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு எவ்வளவு என ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலிடம் வீரப்ப மொய்லி தலைமையிலான நிதித்துறைக்கான நாடாளுமன்றக் குழு கேள்வி எழுப்பியது.

உர்ஜித் படேல்

நிதித்துறைக்கான நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல், வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இரவு பகலாக நடந்து வருவதாக கூறினார்.

ரூ. 15 லட்சம் கோடி

ரூபாய் நோட்டுக்களை எண்ணும் பணி இன்னும் முடிவடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு முன்பு, நாட்டில் 17 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாகவும், தற்போது 15 லட்சம் கோடி புழக்கத்தில் இருப்பதாகவும் உர்ஜித் பட்டேல் கூறினார்.

கூடுதல் இயந்திரங்கள்

ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக மற்ற விடுமுறைகளை கூட ரத்து செய்துவிட்டு ரூபாய்களை எண்ணும் பணி நடக்கிறது. ரூபாய் தாள்களை விரைந்து எண்ண வசதியாக கூடுதல் இயந்திரங்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மழைக்கால கூட்டத் தொடர்

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின்னர் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் 2வது முறையாக நாடாளுமன்றக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட எம்பிக்கள் கலந்துகொண்டனர். பணமதிப்பு நீக்கம் தொடர்பான தங்கள் அறிக்கை வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படும் என எம்பிக்கள் குழு தலைவர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து