எதிர்க்கட்சி தலைவர்களிடம் சென்று வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
modi 2017 6 20

புதுடெல்லி, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அமர்ந்திருந்த வரிசைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்று அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமாகியது. மேலும் பாராளுமன்ற வளாகத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடந்துகொண்டியிருந்தது. பாராளுமன்ற கூட்டத்திற்கு  எதிர்க்கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, முலாயம் சிங் யாதவ், பரூக் அப்துல்லா ஆகியோர் உள்பட பலர் வந்திருந்தனர். அவர்கள் வரிசைக்கு பிரதமர் மோடி சென்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். சோனியா இருக்கைக்கு சென்ற மோடி, அவருக்கு நமஸ்தே என்று வணக்கம் தெரிவித்தார். முலாயம் சிங்குடன் கைகுலுக்கிக்கொண்டார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சபைக்கு வந்துள்ள பரூக் அப்துல்லாவுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது சபையில் இருந்த ராம்விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் எழுந்து, பிரதமர் காலில் விழுந்து வணங்கினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரும் எதிர்க்கட்சி தலைவர்களின் வரிசைக்கு சென்று வாழ்த்து தெரிவித்துக்கொண்டனர். லோக்சபை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவை பார்த்து சுஷ்மா சுவராஜ் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து