ராம்நாத் கோவிந்த் வெற்றி 200 சதவீதம் உறுதி

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Raghuras Das 2017 07 17 0

ராஞ்சி, ஜனாதிபதி தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றிபெறுவது 200 சதவீதம் உறுதி என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ரகுபர் தாஸ் தெரிவித்துள்ளார்.

மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள சட்டசபை வளாகத்தில் ஓட்டளித்த பின்னர் ரகுபர் தாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். ராம்நாத் கோவிந்த் வெற்றியின் மூலம் ஒரு சாதாரண மனிதனும் நாட்டின் உயர்ந்த பதவியை அடைய முடியும் என்பது உணர்த்தப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த் எந்தவித சந்தேகமும் இல்லாமல் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவார். ஒரு சாதாரண மனிதன் உயர்ந்த பதவியை அடைவது நாட்டிற்கு மட்டுமல்லாது ஜனநாயகத்திற்கும் பெருமை, கவுரவம் அளிக்கக்கூடியது. மேலும் சாதாரண மனிதன் நாட்டின் பிரதமராகவும் ஜனாதிபதியாகவும் வரலாம் என்பது பாரதிய ஜனதா ஆட்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று ரகுபர் தாஸ் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து