பார்லி. மழைக்கால கூட்டத்தொடர்: இரு அவைகளும் ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
parliament 2017 1 29

புதுடெல்லி : பாராளுமன்ற மழைக்கால தொடரின் முதல் நாளில், நேற்று மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தியதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
உறுப்பினர்களுக்கு அஞ்சலி

டெல்லியில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மக்களவையில் சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அவையை தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அவை தொடங்கியதும் வினோத் கன்னா, முன்னாள் மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே உள்ளிட்ட மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மக்களவை ஒத்திவைப்பு


இதுதொடர்பாக மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறுகையில், அமர்நாத் யாத்திரை பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது என தெரிவித்தார். இதையடுத்து, மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையில் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி அவையை தொடங்கி வைத்தார். அவை தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமர்நாத் யாத்திரை மேற்கொண்ட பக்தர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து