முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி தேர்தலில் விறு விறு வாக்குப்பதிவு - சென்னையில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் வாக்களிப்பு

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ஜனாதிபதி தேர்தலில் நேற்று நாடு முழுவதும் முக்கிய தலைவர்கள் வாக்களித்தனர். சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். மொத்தம் உள்ள வாக்காளர்களில் 99 சதவீதம் பேர் நேற்று வாக்களித்தனர்.

4,896 பேர் வாக்குரிமை ...

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து, புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. உலகிலேயே மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் ஆளும் பா.ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்தனர். தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றிருந்தனர்.(எம்.பி.க் களில் 543 பேர் மக்களவை உறுப்பினர்கள், 233 பேர் டெல்லி மேல்-சபை உறுப்பினர்கள்).

ஓட்டு மதிப்பு 708 ..

ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். ஜனாதிபதி தேர்தலில் ஓட்டுப்பதிவு நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தன. அந்த வகையில் மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

பிரதமர் வாக்களிப்பு

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். பா.ஜனதா தலைவர் அமித்ஷாவும் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து எம்.பி.க்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தி, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியுடன் வந்து வாக்களித்தார்.

முதல்வர் வாக்களிப்பு

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தமிழக முதல்வர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் நாங்கள் ஏற்கனவே அறிவித்தப்படி வாக்களிக்கிறோம் என்றார். ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்களித்த பின்னர் பேசுகையில், ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்பார் என்றார். மத்திய அமைச்சர் பொன். ராதா கிருஷ்ணன் தன்னுடைய வாக்கை பதிவு செய்தார்.

கேரள எம்.எல்.ஏ....

பின்னர் தொடர்ச்சியாக எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்தனர். கேரளாவை சேர்ந்த ஐ.யூ.எம்.எல். கட்சி எம்.எல்.ஏ அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்.  புதுச்சேரி தலைமைச்செயலக வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் நாராயணசாமி வாக்களித்தார். இதுபோன்று பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

99 சதவீதம் பேர் ...

நேற்று நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் உள்ள வாக்காளர்களில் 99 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி அனூப் மிஸ்ரா நேற்று தேர்தலுக்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

நேற்று பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட 20-ம் தேதி முடிவுகள் வெளியாகவுள்ளது. துணை-ஜனாதிபதி தேர்தல் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளையுடன் முடிகிறது. ஆளும் தேசிய ஜனாயாக கூட்டணி சார்பில் துணை-ஜனாதிபதி வேட்பாளராக வெங்கய்யா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். துணை-ஜனாதிபதியாக இருக்கும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து