மணிப்பூர் தலைநகர் இம்பாலில் குண்டு வெடிப்பு

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      இந்தியா
manipur 2017 03 18

Source: provided

இம்பால் :  மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று காலை குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வர்த்தக பகுதியான சொய்பாம் லெய்கையில் நேற்று காலை சரியாக 11 மணியளவில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த குண்டுவெடிப்பில் உயிர் சேதம் ஏதும் இல்லை என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து