முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூ‌ஷண் ஜாதவின் கருணை மனு பற்றி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவின் கருணை மனு பற்றி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆய்வு செய்து வருகிறார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷண் ஜாதவ். இவரை கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.

பாகிஸ்தான் மீது குற்றம்

ஈரான் வழியாக பாகிஸ்தானின் பலுசிஸ்தானுக்கு வந்து, உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியது. ஆனால் அதை மறுத்த இந்தியா, ஈரானில் இருந்து ஜாதவை கடத்தி வந்து கைது செய்ததாக பாகிஸ்தான் மீது குற்றம் சாட்டியது.

ஜாதவுக்கு கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. ராணுவ மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இருப்பினும், இந்தியாவின் முறையீட்டின்பேரில், மரண தண்டனையை நிறுத்தி வைக்க சர்வதேச கோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து, ராணுவ தளபதி காமர் ஜாவீது பஜ்வாவிடம் குல்பூ‌ஷண் ஜாதவ் கருணை மனு தாக்கல் செய்தார்.அதன் நிலை குறித்து ராணுவ செய்தித்தொடர்பாளர் ஆசிப் காபூர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மனு மீது இறுதி முடிவு

குல்பூ‌ஷண் ஜாதவ் கருணை மனு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அவரது மனுவை ராணுவ தளபதி பரிசீலித்து வருகிறார். ஜாதவுக்கு எதிரான ஆதாரங்களை ஆய்வு செய்து வருகிறார். தகுதி அடிப்படையில், மனு மீது இறுதி முடிவு எடுப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து