முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பணக்காரர்கள் ஏழைகள் இடையிலான இடைவெளி குறைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம்

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையிலான இடைவெளியை குறைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு கடைசி இடம் கிடைத்து உள்ளது என ஒரு ஆய்வில் தெரியவந்து உள்ளது.

132 வது இடத்தில்  இந்தியா

இந்தியாவில் மிகப்பெரிய  ஏற்றத்தாழ்வு பிரச்சனை  உள்ளது. அதை சரி செய்வது போதுமானதாக இல்லை என தெரிவிக்கபட்டு உள்ளது.உலக அளவில் பொருளாதார ஏற்றதாழ்வு அதிகம் உள்ள நாடுகள் அதை சரி செய்ய முடியாத நிலை குறித்து  நியூ ஆக்ஸ்பாம் என்ற நிறுவனம்  ஆய்வு நடத்தியது.ஆக்ஸ்பாம், சமூகச் செலவு, வரி மற்றும் தொழிலாளர் உரிமைகள் மீதான ஒவ்வொரு நாட்டின்  அரசாங்க நடவடிக்கை  குறித்து ஆய்வு நடத்தி ரேங்க் பட்டியல் வெளியிட்டு உள்ளது. இதில் இந்தியா 152 நாடுகளில் 132 வது இடத்தில் உள்ளது.

ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க், நோர்வே மற்றும் ஜெர்மனி முதலிடம் வகிக்கிறது.இந்தியா 152 நாடுகளில் 132 வது இடத்தைப் பெற்றுள்ளது.இந்த புதிய குறியீடு புதிய சமநிலையை குறைப்பதற்கான ஒரு நாட்டிற்கு உதவியாக  இருக்கும் என  நம்புவதாக ஒக்ஸ்பாம் ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

முதல் வரிசையில் உள்ள  சில நாடுகள் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதில் இந்த மூன்று பகுதிகளிலும் அரசாங்கங்கள் வலுவான முன்னேற்றமடைந்துள்ளன.

ரேங்க் பட்டியல்

இந்த ரேங்கட்டியல்  21 பிரிவுகளை கொண்டு ஒவ்வொரு பிரிவுக்கும் ரேங்க் பட்டியல் வெளியிடபட்டு உள்ளது.  சுகாதார மற்றும் கல்வி செலவினங்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி வருவாய் பங்கு, வரி விலக்குகள் பங்கு, குறைந்தபட்ச ஊதியம் மற்றும் மகப்பேறு நன்மைகள் குறித்தும் கணக்கிடப்பட்டு உள்ளது.சமூக செலவீனங்களில் இந்தியாவிற்கு 152 வது இடம் கிடைத்து உள்ளது. முற்போக்கு வரி விதிப்பில் 91 வது இடமும்  தொழிலாளர்கள் உரிமைகள் முக்கியத்தும் 86 வது ரேங்கும் கொடுக்கப்பட்டு உள்ளது. சுகாதார செலவீனம், கல்வி மற்றும் சமூக பாதுகாப்பு மிகவும் மோசமாக உள்ளது என இந்தியா குறித்து அந்த அறிக்கை கூறுகிறது.

பெண்களுக்கு மரியாதை

வரி அமைப்பு ஆவணங்களில் நியாயமான முற்போக்கானதாக தோன்றுகிறது, ஆனால் நடைமுறையில் மிகவும் முற்போக்கான வரி சேகரிக்கப்படவில்லை. தொழிலாளர் உரிமைகள் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு மரியாதை வழங்குவது இந்தியாவில் மோசமாக உள்ளது.

கட்டுப்பாடான தொழிலாளர் சந்தைக் கொள்கைகள்  இந்தியாவில் உழைக்கும் உழைப்பு தீவிர உற்பத்தித் துறைக்கு தடையாக இருக்கும் காரணிகளில் ஒன்றாகும், இவ்வாறு அந்த அறிக்கையில்  கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து