விம்பிள்டன் டென்னிஸ்: 8வது முறையாக பட்டம் வென்று ரோஜர் பெடரர் சாதனை

திங்கட்கிழமை, 17 ஜூலை 2017      விளையாட்டு
Roger Federer 2017 7 17

லண்டன் : விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ரோஜர் பெடரர் சாதனை படைத்துள்ளார்.

8வது முறையாக ...

கிராண்ட்ஸ்லாம் பட்ட போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் மற்றும் குரோஷிய நாட்டை சேர்ந்த மரீன் சிலிச் ஆகியோர் விளையாடினர். இந்த போட்டியில் ஒரு செட்டை கூட இழக்காமல் 6-3, 6-1, 6-4 என்ற நேர் செட்களில் சிலிச்சை வீழ்த்தினார் பெடரர்.  அதனுடன் விம்பிள்டன் டென்னிசில் 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.


2வது பட்டம் ...

இதனால் இதுவரை சாதனை பட்டியலில் இருந்து வந்த அமெரிக்க வீரர் பீட் சாம்பிராஸ் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.  அவர் மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இந்த வருடம் ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தினை வென்றார்.  அதன்பின் அவர் வெல்லும் 2வது பட்டம் இதுவாகும்.


அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள்

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற வீரர்கள் விவரம் வருமாறு:-

ஆண்டுதோறும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் ரோஜர் பெடரர் இதுவரை ஆஸ்திரேலிய ஓபன்-5, பிரெஞ்ச் ஓபன்-1, விம்பிள்டன்-8, அமெரிக்க ஓபன்-5 என்று மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார். அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற டாப்-5 வீரர்கள் விவரம் வருமாறு:-

பெடரர் (சுவிட்சர்லாந்து) -19.

ரபெல் நடால் (ஸ்பெயின்) -15.

பீட் சாம்ப்ராஸ் (அமெரிக்கா) -14.

ராய் எமர்சன் (ஆஸ்திரேலியா) -12.

ஜோகோவிச் (செர்பியா) -12 .

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து